திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ் கள்ளுக்குடியில் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரி ஆக உள்ளார். மேலும் ஆடு, மாடு ,கோழி ஆகியவற்றவை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது ஆட்டுக் கொட்டகையில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இது அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராவில் 4 நபர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்டை திருடி சென்றது பதிவாகியுள்ளது. இதுகுறித்து சோமசுந்தரம் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ப நபர்களை தேடி வருகின்றனர் .
இப்பகுதியில் தொடரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே உடனடியாக திருடர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments