திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் முதல் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இன்று (11.03.2024) ஆம் தேதி அதிகாலை 05:40 மணி அளவில் மேற்படி கோவில் குருக்கள் திருக்கோவில் சன்னிதானத்தில் வலது பக்கம் உள்ள அருள்மிகு சூரப்ப நாயக்கர் அம்பாளுக்கு (அபிஷேக அம்பாள்) தீபாரதனை காட்டும்போது,
கையை மேலே தூக்கிய சமயத்தில், மேல் பந்தலில் கட்டி இருந்த வெட்டிவேரில் தீ பற்றிக்கொண்டது. இதில் சமயபுரம் சன்னதி வீதியைச் சேர்ந்த நாகநாதன், (55) வலது தோள்பட்டையிலும், சமயபுரம் சக்தி நகரைச் சேர்ந்த, குரு, (40) என்பவருக்கு முகம் மற்றும் இரண்டு கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே இரண்டு குருக்களையும் SRM மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதற்கிடையில் அங்கு இருந்தவர்கள் தீ அணைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments