திருச்சி மாநகரில் கடந்த 30ம் தேதி பட்டப் பகலில் அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, SIT கல்லூரி அருகே அரிவாள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களால் அரியமங்கலம் திடீர்நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முத்துகுமரை வெட்டி கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் தப்பி சென்றனர் இந்த கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளபட்டது.
விசாரணையில் இறந்த முத்துகுமாரின் உறவினாரான லோகு (எ) லோகநாதன் மற்றும் தக்காளி முபாரக் தினேஷ் (எ) கூல் தினேஷ் தங்கமணி (எ) டேஞ்சர் மணி குமரேசன், இளஞ்செழியன், பிரசாத் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மேலும் பொன்மலை மலையடிவாரத்தை சேர்ந்த ரவுடி தங்கமணி (எ) டேஞ்சர் மணி என்பவர் மீது ஏர்போர்ட் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கும், உறையூர் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 1 வழக்கு உட்பட மொத்தம் 13 வழக்குகள் பதியப்பட்டு, தற்போது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது..
மேலும் அண்ணாநகர், மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி தினேஷ் (எ) கூல் தினேஷ் என்பவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும், 1 கொலை முயற்சி வழக்கு உட்பட மொத்தம் 4 வழக்குகள் பதியப்பட்டு, தற்போது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
தங்கமணி (எ) டேஞ்சர் மணி மற்றும் ரவுடி தினேஷ் (எ) கூல் தினேஷ் ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments