Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இரு சிறுவர்கள் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் நடராஜன் காலனியை சேர்ந்தவரன் சூர்யா (22). இவன் கேட்டரிங் பணிக்கு சென்று வந்த பொழுது, தேவரப்பம் பட்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிறுவர்களிடம், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம் எனவும், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்கு தான் திட்டம் தீட்டி தருவதாக கூறி இரு சிறுவர்களையும் மூளை சலவை செய்து உள்ளான்.

இதனை நம்பிய சிறுவர்கள் இருவரும், சூர்யாவின் ஆலோசனையின் படி, துறையூர் பேருந்து நிலைய பகுதியில், கொள்ளை அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டனர். கடந்த இருபதாம் தேதி அன்று அப்பகுதியை சுற்றி வந்துள்ளனர். அப்பொழுது இரு சிறுவர்கள் பைக்கில் வந்து சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக துறையூர் பேருந்து நிலையம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் இருசக்கர வாகனத்தில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே சென்று செல்லும்பொழுது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்களும், சாலை பராபரனை மிரட்டி தாக்கியதோடு, பால பிரசன்னாவின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ஒரு சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் தப்பி சென்ற இருவரையும் துரத்தி சென்றதில், ஒரு சிறுவன் பொதுமக்களிடம் பிடிபட்டான்.

சிறுவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணை நடத்தினர். இரண்டு சிறுவர்களும் துறையூர் நடராஜன் காலனியை சேர்ந்த சூர்யா உதவியுடன் திருட்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த சிறுவனை கைது செய்த துறையூர் போலீசார், தப்பிச் சென்ற மற்றொரு சிறுவன் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் வலை வீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை துறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார், ஆத்தூர் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த சிறுவன் மற்றும் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், சிறுவன் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவன் என்பதும், அந்த இளைஞர் கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி கொடுத்த சூர்யா என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த சுமார் ஒரு பவுன் எடையுள்ள தங்க செயின் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிறுவனை துறையூர் போலீசார் திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யா கடந்த மாதம் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் 17 அரை சவரன் செயின் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துறையூரில் கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி கொடுத்த தொடர் கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *