திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள மேனகா நகரில் வைரம் என்ற அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த திருநாராயண நகர் பகுதியை சேர்ந்த உமர் மகன் கமாருதீன் வைரம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறார் .
இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை விற்பனை செய்வதற்காக அப்பகுதியில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பாரம் அருகே விளம்பர பதாதகையினை வைத்துள்ளனர். இரவு டோல்கேட் பகுதியில் பெய்த கடும் மழையினால் இந்த விளம்பரப் பதாதை தரையின் கீழே விழுந்து கிடந்தது.
கீழே கிடந்த பதாகையினை கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் தூக்கியபோது காற்றின் வேகத்தில் அருகில் இருந்த இபி டிரான்ஸ்பர்மில் சாய்ந்த்து. இதில் மண்ணச்சநல்லூர் அருகே சென்னகரை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் சேட்டு (36) என்பவரும் லால்குடி திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் செல்லதுரை (40) என்பவரும் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த விமல்குமார் என்பவர் திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கொள்ளிடம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments