திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கேசவ அம்பலகாரனூர் பகுதியினை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனியப்பன் மகன் கருப்பையா (60). இவர் தனது இருச்சக்கர வாகனத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கருங்குளம் பிரிவு பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்ற விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி போலீஸார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
அதேபோல், மருங்காபுரி ஒன்றியம் முக்கன்பாலம் பகுதியினை சேர்ந்த பொன்னன் மனைவி நாச்சம்மாள் (60), மதுரை – திருச்சி தேசியநெடுஞ்சாலை முக்கன்பாலம் பிரிவு பகுதியில் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்ற விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி போலீஸார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments