கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா தொழுதூர் ராமநத்தம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (23). கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா சிறுப்பாக்கம் எஸ் புதூர் நடுத்தரவை சேர்ந்த நிவேதா. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சமயபுரம் கூத்தூர் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இடது புறத்தில் உள்ள பாலக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் வலது புறத்தில் சென்ற தனியார் பேருந்தில் அடிபட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments