துறையூர் வனச்சரக அலுவலர் N.பொன்னுசாமி, வனச்சரக அலுவலர் தலைமையில் சோபனாபுரம் பிரிவு வனவர் சியாம் சுந்தர், வனக்காப்பாளர்கள் ஆனந்தன், இரா.தனலட்சுமி, குமரவேல் ஆகியோர் அடங்கிய குழு நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த பொழுது கொப்பம்பட்டி பீட், மண்மலை காப்புக்காடு, காஞ்சேரிமலை அருகில் இருவர் நெற்றி லைட்டுடன் சுற்றி திரிவதை கண்டு அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்.
அப்பொழுது அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கிக்குரிய வெடி மருந்து மற்றும் பால்ரஸ் குண்டுகள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஆர்த்தி நாடு பஞ்சாயத்து, மாயம்பாடி அஞ்சல், முள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த குமார், பிரபு ஆகிய இருவரும் சகோதாரர்கள் என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments