Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போலி ஆவணங்கள் சமர்பித்து கடன் பெற முயற்சித்த இருவர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர் 16147 அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் எண். 8232 பிரகாஷ் த.பெ. சுப்ரமணியன், அல்லூர் மற்றும் உறுப்பினர் எண். 8133 புவனேஸ்வரி க.பெ.ஜெயராமன் அல்லூர் ஆகிய இருவரும் சங்கத்தில் விவசாயக்கடன் பெறுவதற்கு, சிட்டா ஆவணங்களை கடந்த (05.08.24)-ஆம் தேதி சங்க அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்ததாகவும்,

அந்த சிட்டா ஆவணங்களை விஏஒ அடங்களை விசாரித்தில், அதில் போலியான சீல் மற்றும் கையொப்பம் போடப்பட்டுள்ளது என்று தெரியவந்ததாகவும். அதனால் அவருக்கு கடன் வழங்கவில்லை என்றும், மேற்படி ஆர் 16147 அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் (59), த.பெ. கிருஷணன், காந்திபுரம். பெட்டவாய்த்தலை என்பவர் போலி ஆவணங்கள் சமர்பித்து கடன் பெற முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் இன்று (27.08.2024) ஜீயபுரம் காவல் நிலைய குற்ற எண். 230/2024 u/s 318,(2) 318(4), 335, 336(3) 340, 341 BNS-ன் படி வழக்கு பதிவு, மேற்படி வழக்கின் எதிரிகளான A1.பிரகாஷ். த.பெ.சுப்பிரமணியன், அல்லூர் மற்றும் A2.புவனேஸ்வரி. க.பெ.ஜெயராமன், அல்லூர், ஆகியோரை ஜீயபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *