திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி காட்டூர் பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய போதை மாத்திரையும் மற்றும் ஊசிகள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகனின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக ரோந்து சென்ற பொழுது காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த ரமணா மகன் ரமேஷ் (36), காட்டூர் அன்னதாசன் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஸ்டீபன்ராஜ் (22) ஆகிய இருவரும் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்பனை செய்தபோது கையும் களவுமாக கைதுசெய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் மற்றும் ஸ்டீபன்ராஜை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவர்கள் இருவரையும் வரும் 5ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments