Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்ய உதவிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (30.04.2024)-ந் தேதி காலை 10:30 மணிக்கு, அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, SIT கல்லூரி அருகே DJ Stainless Steel Works என்ற கடை முன்பாக அரிவாள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களால் அரியமங்கலம் திடீர்நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி முத்துகுமார் என்பவரை வெட்டி கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டதாக புகார் பெறப்பட்டது.

புகாரின் பேரில், சம்பவம் இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி, அரசுமருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பியும், அரியமங்கலம் காவல்நிலைய குற்ற எண்.350/24 u/s 147, 148, 302 IPC- வின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ள்பட்டது.

விசாரணையில் இறந்த முத்துகுமாரின் உறவினாரான 1.லோகு (எ) லோகநாதன் மற்றும் 2.தக்காளி முபாரக், 3.தினேஷ் (எ) கூல் தினேஷ், 4.தங்கமணி (எ) டேஞ்சர் மணி, 5. குமரேசன் 6.இளஞ்செழியன், 7.பிரசாத் ஆகியோர்கள் சேர்ந்து கொண்டு மேற்படி கொலை சம்பவத்தை செய்துள்ளார்கள் என விசாரணையில் தெரிய வந்தது. மேற்கண்ட எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

மேலும் அரியமங்கலம், அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி குமரேசன் (24) த.பெ.சுப்ரமணி என்பவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கு, 1 அடிதடி வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு உட்பட மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 1.ரவுடி தக்காளி முபாரக் (எ) முகமது முபாரக், 2.ரவுடி லோகு (எ) லோகநாதன், 3.ரவுடி தங்கமணி (எ) டேஞ்சர் மணி மற்றும் 4. ரவுடி தினேஷ் (எ) கூல் தினேஷ் ஆகியோர் மீது மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்திரவின்பேரில் ஏற்கனவே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே ரவுடி குமரேசன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *