Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போலியான உணவு பாதுகாப்பு உரிமம் தயாரித்த இரண்டு நபர்கள் திருச்சியில் கைது 

திருச்சி மண்ணச்சநல்லூர் சீதேவிமங்கலம், நடுதெருவைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் புத்தூர் நால் ரோட்டில் Herba Life என்ற பெயரில் ஊட்டச்சத்து பொருள்கள் விற்பனை கடையை நடத்தி வருகிறார். இவர் 17.03.2021 அன்று தனது கடைக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலரிடம் கையொப்பம் வேண்டும் என ஒரு உரிமத்தை தந்துள்ளார். அதனை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் ஆய்வு செய்ததில் அது போலியானது என்று தெரிய வந்தது.

மேலும் அந்த உரிமம் மேற்கு வங்காளத்தில் உள்ள Retail கடையின் உரிமம் என்னில் திருச்சியில் உள்ள Herba Life நிறுவனத்தின் பெயரை போலியாக கொண்டு உணவு பாதுகாப்பு துறை உரிமம் தயார் செய்துள்ளது ஆய்வின் போது கண்டறியப்பட்டது. மேலும் அவர் உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ் மேல் விசாரணை செய்வதற்கு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிட்டார் பின்னர் பொன்ராஜ் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அந்த உரிமத்தை காட்டூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் புத்தூர் நால் ரோட்டில் உள்ள Herba Life நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் போலியாக பெங்களூரில் இருந்து தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.

இதனையெடுத்து புவனேஸ்வரன் மற்றும் பாஸ்கரன் ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு காவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில்….உணவு பாதுகாப்பு துறை உரிமத்தை போலியாக தயார் செய்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உரிமம் வாங்கியோ அல்லது விற்பனை செய்தோ தமிழக அரசின் வருவாய் இழப்பு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு பெறுவதற்கு அருகிலுள்ள ஆன்லைன் சென்டர்களையோ அல்லது என்ற www.fssai.gov.in இணையதளத்தில் பதிவு செய்தால் உணவு பாதுகாப்பு துறை ஆணையம் புதுடெல்லியில் உத்தரவுப்படி பதிவு செய்த 30 நாட்களுக்குள்ளும் உரிமம் என்றால் 60 நாட்களுக்குள்ளூம் மூப்பு தரவரிசை அடிப்படையில் அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலமாக தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் இடைத்தரகர்களையோ, உணவு பாதுகாப்புத்துறை பெயரைச் சொல்லியோ யாரும் சான்றிதழ் பெற்றுத் தருவேன் என்று கூறினால் நம்பவேண்டாம் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *