Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

“எடப்பாடி அரசுக்கு இரண்டு ஆப்பு தயாராக உள்ளது” – திருச்சியில் உதயநிதி பேச்சு!!

விடியலை நோக்கி தேர்தல் பரப்புரையை இன்று திருச்சியில் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் திமுகவினர் வரவேற்பளித்தனர். தொடர்ந்து திருச்சி எடத்தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பறை இசை முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பு.

Advertisement

திரண்டுள்ள மக்களுக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்…”எல்லா விருதுகளும் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். யார் சிறந்த அடிமை என்ற போட்டி வைத்து விருது கொடுத்தால் எடப்பாடி பழனிச்சாமி & ஓ. பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கலாம். மக்கள் ஓட்டு போட்டது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தான். எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலை பிடித்து முதலமைச்சர் பதவியை பிடித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி கொடுத்து அதிமுக மற்றும் பாஜகவை ஓட ஓட விரட்டியது மக்கள் நீங்கள் தான்!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியை தேர்ந்தெடுக்கும் போது தமிழகத்தில் மோடிக்கு பூஜ்ஜியம் தான் கிடைத்தது. அதனால் மோடிக்கு நம்மீது கோபம் இருக்கும். நம்மீது உள்ள கோபத்தினால் தான் மோடி புதிய வேளாண் சட்டம், விமான நிலையம், ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிரார். வேளாண் சட்டத்தால் எந்த பாதிப்பும் வராது என முதல்வர் எடப்பாடி கூறுகிறார் எந்த பாதிப்பும் வராத சட்டத்திற்காகவா விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரில் போராடி வருகிறார்கள் என்பதுதான் கேள்வி. எடப்பாடி அரசுக்கு இரண்டு ஆப்பு தயாராக உள்ளது. வருகிற ஜனவரி 22ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருகிறார். சசிகலா ஜெயலலிதா உடன் இருந்தவர். எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் அவர் முன்பு ஒன்றும் செய்ய கிடையாது. இரண்டாவது ஆப்பு மக்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Advertisement

உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக திருச்சி பாலக்கரை எடத் தெருவில் மக்கள் காத்திருந்த பொழுது அவரை வரவேற்பதற்காக பறையிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசைக்கு நடுவில் பக்தி மயத்துடன் ஒரு சாமி ஆட காத்திருந்த கூட்டம் கலை கட்டியது.

அப்போது திடீரென கூட்டத்திற்கு வந்த பெண்களின் கூட்டமும் பறையிசை கூட்டத்திற்குள் நுழைந்து குத்தாட்டம் போட்டனர். அதிலும் 70 வயதை கடந்த ஒரு மூதாட்டி நடனமாடியது கூடுதல் குதூகலம். உதயநிதி ஸ்டாலின்காக காத்திருந்த கூட்டம் இந்த குத்தாட்டத்தை பார்த்தவுடன் பூரிப்படைந்து தங்களுடைய செல்போன்களின் போட்டோ வீடியோ எடுக்க தொடங்கினர். 

Advertisement

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *