திருச்சி மாவட்டம், சமயபுரம் நான்கு ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை பின்புறத்தில் அமைந்துள்ள மதுபான பாரில் சமயபுரம், மாடக்குடி அர்ஜுனன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரது மகன் அஜித் (28),அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி என்பவரது மகன் விஜய் (28), இவர்கள் இருவருக்கும் நேற்று இரவு மதுபானம் வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுபான கடை பாருக்கு இருவரும் வந்துள்ளனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. உருட்டு கட்டை மற்றும் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த இரு வாலிபர்கள் திருவரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் முன் விரோதத்தில் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சமயபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments