திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொட்டியம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கதிரேசன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தொட்டியம் கோட்டைமேடு புளிய மரத்தடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அப்போது விசாரணையில் தொட்டியம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் சந்தோஷ் (30), சண்முகசுந்தரம் மகன் கிரண் (24) என்பதும், சுமார் 800 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக கையில் வைத்து இருந்தது தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில் இருவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து 800 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து 2 வாலிபர்கள் கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments