திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்பாட்டில் திருச்சி கிழக்கு தொகுதியில் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் நிறுவப்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முழு உருவச் சிலை மாநில இளைஞரணி செயலாளர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கடந்த (25.01.24) தேதியன்று திறந்து வைக்கப்பட்டது. இன்றைய தினம் திருச்சி வருகையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தனது திருக்கரங்களால் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சிலையை திறந்து வைத்த மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கணையாழி அணிவித்தார். நிகழ்வில் கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகர கழகச் செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், துணை மேயர் திவ்யா செந்தில், பகுதிகழகச் செயலாளர் மணிவேல் ஆகியோர் இருந்தனர்.
Comments