Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாட்டை எதிர்காலத்தில் வழி நடத்தகூடியவர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே – அமைச்சர் பேச்சு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தந்தை பெரியார் சிலை அருகே நகர செயலாளர் மு.ம.செல்வம் தலைமையிலும், நிர்வாகிகள் ஜான் பிரிட்டோ, துரை காசிநாதன், கண்ணன், பால்ராஜ், கார்த்திகேயன், நிஜாமுதீன், பால்பாண்டி, கோபி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிக வரித்துறை, பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் என்.கோவிந்தராஜன், குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ராஜேந்திரன், செல்வராஜ், நகர வட்ட கழக நிர்வாகிகள் இலியாஸ், வெற்றிச்செல்வன், பழனிவேல், முத்து, சுரேஷ்பாபு, சங்கர், பால்ராஜ், அந்தோணி குரூஸ், தர்மராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்….. தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்க்கான திட்டங்களை முதல்வர் வகுத்து கொண்டு உள்ளார். வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமத்தை குறைக்க இலவச மகளிர் பேருந்து திட்டம், மகளிர் சிரமத்தை குறைக்கும் வகையில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் தொடங்கி உள்ளார்.

மேலும் பெண்கள் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் மாதம் ரூ.1000 கலைஞர் உரிமை திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது. இதுவரை 80% பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டவர்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் நடவடிக்கையால் வணிகவரித்துறை பத்திர பதிவுத்துறை மூலம் வருவாய் அதிகரித்துக் கொண்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் வரப்பட்ட ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயை மக்களின் நலனுக்காக திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை பார்த்து அண்டை மாநிலங்கள் கற்றுக் கொண்டு உள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்ணா நினைவாக நூலகம் அமைத்தார். தமிழக முதல்வர் ஒரு படி மேலே போய் முத்தமிழ்அறிஞர் கருணாநிதி நினைவாக மதுரையில் மிக பிரமாண்டமாக மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் நூலகம் அமைத்து பெருமை சேர்த்துள்ளார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் உச்சநீதிமன்ற 5 நீதியரசர்கள் முன்பு தீர்ப்பு பெற்று தந்தவர் முதல்வர் ஸ்டாலின். இன்று யார் யாரோ உரிமை கோரி வருகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சி என்ற பெருமையை யாரும் உரிமை கோர முடியாது. INDIA கூட்டணியின் பெரும் பங்கு தமிழக முதல்வரையே சாரும், சேலத்தில் டிசம்பரில் நடைபெறும் மாநாடு வெற்றி முனைப்பு மாநாடாக அமையும். தமிழ்நாட்டை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்த கூடியவர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே என பேசினார். கூட்ட முடிவில் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *