Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

உதயநிதி பேச்சு உடையுமா I.N.D.I.A கூட்டணி ? வடக்கே கடும் எதிர்ப்பு !!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் சனா தன ஒழிப்பு மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசிய பொழுது… நாம எல்லாம் சந்தோஷமா இருக்கிற சமயத்துல, திடீர்னு ராஜ்பவனில் இருந்து சனாதனம், சனாதனம்னு குரல் கேட்டுக்கிட்டே இருக்கு.
“கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல், சனாதனத்தை ஒழிக்க வேண்டும்,” எனப்பேசியதால் சலசலப்பு.

சிலவற்றை நாம் ஒழிக்கதான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோல்தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.எதுவும் நிலையானது கிடையாது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க உருவானது, கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. இயக்கங்கள். வள்ளலார் ஏற்றிய அடுப்பில் இருந்து நெருப்பு எடுத்து, பள்ளிகளில் காலை உணவு திட்டம் என்ற அடுப்பை, முதல்வர் பற்ற வைத்துள்ளார். சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்தது. இன்று பெண்கள் விளையாட்டு போட்டிகளில், சாதனை படைத்து வருகின்றனர்; மகளிர் சுய உதவிக்குழு வழியாக கடன் பெற்று, தொழில் செய்கின்றனர்.

சனாதனம், பெண்களை உடன்கட்டை ஏற வைத்தது. குழந்தை திருமணம் நடந்தது. ஆனால் திராவிடம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஏற்பாடு செய்துள்ளது. கல்லூரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்க உள்ளது. கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதாகக் கூறி, ‘விஸ்வகர்மா’ என்ற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வருகிறது. இதையே குலக்கல்வி திட்டம் என ராஜாஜி 1956ல் கொண்டு வந்தார். மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை. தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவி விலகியது போல், மோடிவரும் தேர்தலில் படுதோல்வி அடைவார்.

சினிமாவுல சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசிக்கிட்டு இருந்தப்ப, கருணாநிதி தன்னுடைய பேனாவை ஈட்டியாக்கி, தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனா பயன்படுத்தப்பட்டன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் பிறகு தான் கலையும், எழுத்தும் உழைக்கிற மக்களுக்காக தோன்றியது.எனப்பேச, உதயநிதியின் இந்த பேச்சு வட இந்தியாவரை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியின் மீடியா பொறுப்பாளர் – உதயநிதியை மன்னிப்பு கேட்க வேண்டும் எனச்சொல்லியிருக்கிறார். 

இந்தப்பேச்சு ஒருபுறம் இருக்க தங்கள் குடும்பத்தைச்சார்ந்தவர்களையே ஸ்டாலின் மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுதுவதையும் திமுகவினரே ரசிக்கவில்லை என்கிறார்கள் உடன்பிறப்புக்கள் I.N.D.I.A கூட்டணியில் கனிமொழி, தயாநிதி ஆகியோருக்கு பதவியை கொடுத்ததை குறிப்பிட்டு குமுறுகிறார்களாம். 

கூடும் கூட்டணியகூட்டணிய? கூடா கூட்டணியா? என்பது கூடிய விரைவில் தெரியும் வேறு என்ன சொல்ல…

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *