Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

உலகநாயகி அம்மன் கோயில் பங்குனி பெருவிழா

விற்பன்னர்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த கிராமங்களை சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடுவது பண்டைய மரபு அப்படியோர் சதுர்வேதிமங்கலமாய்  இருந்து தற்சமயம் வாளாடி என்று அழைக்கப்படுகின்ற தான் திருச்சி வாளாடி கிராமம். இவ்வூர் காயத்ரி நதிக்கரையில் அமைந்துள்ள புண்ணிய தலம் இங்கு காவிரி தாயே தன் கரங்களை வடதிசையை நோக்கி விரித்து காயத்ரி நதியாக ஓடி வருகிறாள்.

அருள்மிகு உலகநாயகி அம்மன் கோவில் காயத்ரி நதிக்கரையில்  ஊரின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
 இந்த அம்மனை கிராமத்தின் காவல் தெய்வம் என்றும் ஆலயத்தை பிடாரி கோயில் என்றும் அழைப்பார்கள்.

பங்குனிப் பெருவிழா

பங்குனி மாதத்தில் உலக நாயகி அம்மனுக்கு மாபெரும் திருவிழா நடைபெறும் பங்குனி மாதம் முதல் புதன் அன்று முதல் காப்புக்கட்டு இரண்டாவது புதனன்று இரண்டாம் காப்புக்கட்டு அதன்பின் வரும் திங்கள் முதல் வெள்ளி 5 நாட்களிலும் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும் திருத்தேர், அம்மன் குடி புகுதல், விடையாற்றி வைப்பதுடன் பெரு விழா நிறைவு பெறும்.

பணி, படிப்பு நிமித்தமாக வெளியூர் சென்றவர்களும் திருவிழா போன்ற சந்தர்ப்பங்களில் வந்து ஊரின் புனித மண்ணையே பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர் அவர்களைப் பொறுத்தவரை அது சாதாரண மண் அல்ல உலகநாயகனின் திருவடி தடங்கள் பதிந்த பிரசாதம் இவ்வூரில் மட்டுமின்றி எவ்வுகிலும் காக்கும் சிறந்த ரட்சை “வாழ வைக்கும் தெய்வம் வாளாடி உலகநாயகி” என்பது ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இவ்வாண்டு பங்குனி திருவிழா 16.3 2022 அன்று முதல் காப்புகட்டுடன் தொடங்குகிறது. 23.03.2022 அன்று இரண்டாம் காப்புக்கட்டு நடைபெறும் 28.3.2022 அன்று குதிரை வாகனம் 29.03.2022 அன்று சப்பரம், 30.03.2022 பகலில் சிம்ம வாகனம் இரவு பல்லக்கு. 31.03.2022 அன்று தேர் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாட பெறும். 01.04.2022 அன்று அம்மன் குடிபுகுதல் என்ற திருவிழா நடைபெறும். மறு நாள் விடையாற்றி வைப்பதுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். திருச்சி அரியலூர் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.வாளாடி கிராமம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *