திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் எடுத்தவரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். அவரிடமிருந்து டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி அடுத்த சடையம்பட்டி கிராமம் ஆற்றுப்படுகையில் மணல் எடுப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆரோன்ஜென்மராகினி தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்றபோது,
அதே பகுதியினை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் (45) அனுமதியின்றி டிப்பருடன் கூடிய டிராக்டரில் மணல் எடுத்து செல்லும்போது கையும்களவுமாக பிடித்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வையம்பட்டி போலீஸார் செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments