தீபாவளி என்றாலே புத்தாடைகள் அணிந்து இனிப்பு கார வகைகள் சாப்பிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். இதற்கு அடுத்தபடியாக ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை உண்டு மகிழ்வார்கள். அந்த வகையில் சிறப்பு வாய்ந்த சமயபுரம் ஆட்டு சந்தையில் அதிகாலை முதலே ஆடுகளை வாங்க வியாபாரிகள் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
கோடி ரூபாய் வரை வர்த்தகமாகும் ஆட்டு சந்தையில் ஒரு ஆடு 7 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. சமயபுரம் ஆட்டு சந்தையில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லது அருகே உள்ள பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் பொதுமக்கள் குவிந்து உள்ளனர்.
குறிப்பாக சமயபுரம் ஆட்டு சந்தையில் வரும் பொதுமக்கள் வியாபாரிகளுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும், ஆட்டு சந்தையில் சேரும் சகதியுமாக உள்ளதால் ஆடு வாங்க வருபவர்களும் ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகளும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சுகாதாரமற்ற முறையில் சேரும் சகதியுமாக உள்ள இந்த ஆட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி ஆட்டு சந்தை மேம்படுத்த வேண்டும், ஆட்டு சந்தை ஒப்பந்தம் எடுத்தவர்களும் சமயபுரம் பேரூராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments