உறையூர்கிழக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 23 உறையூர் கிழக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மார்ச் 27 பள்ளி வளாகத்தில் திருச்சி நகரமேற்கு வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி தலைமையில் திருச்சி நகர கிழக்கு வட்டார கல்வி அலுவலர் அர்ஜுன் முன்னிலையில் நடைபெற்றது.
எல் கே ஜி, யு கே ஜி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ,மாற்றுத்திறனாளி மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சி, உரைவீச்சு, விளையாட்டு போட்டி, செயல்திறன் போட்டியில் பங்கேற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கி மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.திருச்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் மல்லிகா பெரியநாயகி மாற்றுத்திறனாளி பள்ளி சிறப்பு பயிற்றுநர் சகுந்தலா இயன்முறை மருத்துவர் தெய்வகுமார் பள்ளி மேலாண்மை குழு கல்பனாதேவி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியை பொறுப்பு ம.செசிலி வரவேற்புரை ஆற்றினார் .ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.திரளான பெற்றோர் பொதுமக்கள் பங்கேற்று குழந்தைகளின் திறமைகளை தமிழ் மற்றும் ஆங்கிலவழி கற்றல் திறமைகளை வெளிப்படுத்த உதவிய மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை பெற்றோர்கள் மேடை ஏறி பாராட்டி பேசினர்.
புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு மாலை அணிவித்தும் கிரீடம் அணிவித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
325
27 March, 2025







Comments