திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அறிவித்துள்ளார்.
இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடங்களாகும். இப்பணியிடங்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிரப்பப்படவுள்ளன.
ஆலோசகர்/உளவியலாளர்-1 (Counsellor/Psychologist M.A. or M.Sc., in Psychology) ஒப்பந்த பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23,000- மனநல சமூக சேவகர்- 1 (Psychiatric Social Worker M.A.Social Work (Medial/Psychiatry) பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23,800- மற்றும் செவிலியர்-1 (Staff Nurse – B.Sc., / Diploma Nursing) பணியிடத்திற்கான மாத வாதியம் ரூ.18,000- இப்பணியிடங்களுக்கான அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர். அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரிக்கு (31.08.2024)-க்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ அனுப்பவேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments