Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா – பகல் பத்து உற்சவம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருநாளின் முதல் நாளான இன்று பாண்டியன் கொண்டை , கஸ்தூரி திலகம், நவரத்தின கர்ண பத்திரம், முத்துமாலை பவள மாலை, வைர அபய ஹஸ்தம், அடுக்கு ஆரம், வைர பதக்கம் அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடு மிக விமர்சையாக நடைபெற்றது.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா இன்று தொடங்கியது. பகல் பத்து முதல் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, ரத்தின பாதுகாப்பு வைர அபயஹஸ்தம், லெஷ்மி பதக்கம், புஜகீர்த்தி, பவளமாலை, காசுமாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9:45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல்பத்து வைபவத்தின் 10 ஆம் நாள் வரும் டிசம்பர் 22- ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். அதன் பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான வரும் டிசம்பர் ஜனவரி 23-ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.  அப்போது கிளிமாலை , ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 4.00 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார்.

அதனை தொடர்ந்து வரும் டிசம்பர் 29ஆம் தேதி கைத்தல சேவையும், டிசம்பர் மாதம் 30ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடைபெறும். அப்போது நம்பெருமாள் தங்க குதிரையில் வலம் வருவார்.   வரும் 2024 ஜனவரி மாதம் 1ம் தேதி தீர்த்தவாரி நம்பெருமாள் கண்டருளுவார். ஜனவரி மாதம் 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுறும்.  21 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தின் போது மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பெருமாளுக்கு முத்தங்கியுடன் சேவை சாதித்தருளுவார். 

வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *