Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

வைகுந்த ஏகாதசி பெருவிழா – பழையபடி ஆலோசனை கூட்டம் நடத்த கோரிக்கை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகின்ற (10.01.2025) நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோயில் முக்கிய நுழைவு வாசல் பகுதியாக உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய வழியாக உள்ள கீழவாசல் பகுதியில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரம் மராமத்து பணி என்ற பெயரில்

கடந்த 1 வருடமாக பூட்டி வைத்துள்ளதை உடனடியாக திறக்க வேண்டியும், வருகின்ற வைகுந்த ஏகாதசி பெருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை மீண்டும் பழையபடி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே ஸ்ரீரங்கத்தில் அனைத்து தரப்பினரையும் அழைத்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும்.

கோரிக்கை – 1 : 108 வைணவத் தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதும், ஆன திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயில் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஒரு புகழ்பெற்ற தினமும் ஆன்மீக தலமாகும். தமிழக அரசின் HR-CE-க்கு அதிக வருவாய் தரும் கோயில்களில் இதுவும் ஒன்று.

இங்கு ஸ்ரீரங்கம் கோயிலின் கீழவாசல் பகுதியில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ள கோபுரம், கீழசித்திரை வீதி, கீழ உத்திரவீதி, கீழஅடையவளஞ்சான் வீதிகளை இணைக்கக்கூடிய முக்கிய வழியாக செயல்பட்டு வந்தது. இந்த கோபுரத்தின் வழியாக தினமும் உள்ளுர், வெளியூர் மக்களின் அனைத்து பொதுமக்களும் கடந்து செல்லும்

பாதை. எனவே இந்த கோபுரவாசல் ஸ்ரீரங்கத்தின் முக்கய நுழைவுபாதையாகும். பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனை, ரயில், பேருந்து நிலையம், மார்கெட் செல்வதற்கு முக்கிய நுழைவுவாசல் இந்த கோபுர வாசல் பாதை ஆகும். இதனை கடந்த 1 ஆண்டுகளாக மராமத்து செய்கிறோம் என்று கூறி ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் மூடி வைத்துள்ளது. இதனால் இங்கு வாழும் மக்கள் தினமும் பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம்.

எந்த பணியும் இங்கு நடைபெறுவதாக தெரியவில்லை. எனவே, மூடிக்கிடக்கும் இந்த கீழவாசல் கோபுர நுழைவு வாசலை அங்கு நடைபெறும் மராமத்து பணிகளை விரைந்து முடித்து வரும் 10.01.2025 அன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்குள் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடும்படி இதன் மூலம் ஸ்ரீரங்கம் மக்கள் சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம்.

கோரிக்கை – 2 : வருடந்தோறும் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் போது லட்சத்திற்று அதிகமான மக்கள் வந்து செல்வதை முன்னட்டு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை மீண்டும் பழையபடி ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே, ஸ்ரீரங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனை கேட்டு சிறப்பாக நடத்த ஆவண செய்ய வேண்டும். இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *