தமிழ்நாட்டில் வலிமை சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பதற்கான ஆய்வுக் கூட்டம், திருச்சிராப்பள்ளியில் டான்சம் மேலாண்மை இயக்குனர் சி.காமராஜ், தலைமையில் நடைபெற்றது.
இதில் டான்சம் நிறுவனத்தின் தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு சிமெண்ட் நிறுவனத்தின் வலிமை சிமெண்ட் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது வரை ஒரு லட்சம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் விற்பனை நடைபெற்றுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்து, விற்பனை செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று டான்சம் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அனைத்து உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட விற்பனை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments