திருச்சி காந்தி மார்க்கெட் நெல்பேட்டையில் தக்காளி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. அங்கு காந்தி மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதியிலிருந்து காய்கறி ஏற்றி கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று மாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 407 வேன் ஒன்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் வேனில் பற்றிய தீயானது மளமளவென பக்கத்தில் நின்ற ஆட்டோ மற்றும் 5 இருசக்கர வாகனங்களுக்கு பரவியது.
உடனடியாக மார்க்கெட்டில் பணிபுரிவோர் அங்கிருந்த பிளாஸ்டிக் பெட்டிகளை அகற்றினர். இது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments