திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். டாக்டர் வருண்குமார் சீரிய முயற்சியில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் பணி புரியும் காவல் அலுவலர்கள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக VDart Technologies & Private Ltd நிறுவன தலைவர் மற்றும் ஊழியர்களை அழைத்து வந்தார்.
இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சி VDart நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சித் அஹமத், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வருண்குமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் மனோகரால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் 282 காவல்துறை ஆளினர்களின் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறை ஆளினர்கள் 150 பேர் தங்களது வாரிசுகளுடன் வந்திருந்தனர்.
வேலை வாய்ப்பு நிகழ்ச்சியினை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பித்து உரையாற்றும் போது இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், வேலை வாய்ப்பு அனைவருக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்நிகழ்ச்சிக்கு “நம்பிக்கை” என பெயர் சூட்டி வந்திருந்த காவலர்களின் மகன்,மகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அந்நிறுவனத்தின் QR Code மூலம் ஒவ்வொருவரும் தங்களது படிப்பு விபரத்தினை Online மூலம் அனுப்பியுள்ளனர். இதனை அந்நிறுவனத்தினர் பரிசீலினை செய்து தகுதியான நபர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிறுவனத்தினர். வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நிறுவனத்தின் சார்பாக, தங்களது நிறுவனங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு V Dart நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல்பாடுகள், அலுவலகம் இயங்கும் விதம், ஊழியர்களின் பணி செய்யும் சூழல்,அலுவலக மேலாண்மை அனைத்தையும் நேரில் அழைத்து சென்று காண்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
வேறு நிறுவனங்களில் பணிபுரிய பரிந்துரை செய்வதற்கும், தூரமான பகுதிகளுக்கு சென்று பணிபுரியாமல், அவர்கள் இருக்கும் பகுதிகளிலேயே பணிபுரியும் வகையில் வாய்ப்பை ஏற்படுத்தி தர உள்ளனர். மேலும் இதே போன்று மற்ற நிறுவனங்களும், காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு நிகழ்வினை நடத்த வாய்ப்பினை ஏற்படுத்தி தர திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையினர் தயாராக உள்ளனர்.
குறிப்பாக, இந்நிறுவனத்தினர் காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குடும்ப பெண்கள், திருமணமாகியும், குழந்தை பேறு காரணத்தினாலும், குடும்ப சுழ்நிலை காரணமத்தினாலும், நீண்ட இடைவெளி ஏற்பட்ட காரணத்தினால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டு, அவர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க, இந்நிறுவனம் முன்வந்துள்ளது.
Comments