தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சிறை மானிய கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் தமிழ் நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகள் அவர்களது இல்லத்தினரை வீடியோ கால் வசதி மூலம் தொடர்பு கொள்ள திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் தொலைதூரத்தின் உள்ள சிறைவாசிகளின் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் மேலும் காவல்துறை இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகள் துறை வழிகாட்டுதலின் படி, திருச்சி மகளிர் தனிச்சிறையில் உள்ள சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் அவர்களது இல்லத்தினருடன் பேசுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டடது.
இன்று (18.04.2023) சு.ஜெயபாரதி, திருச்சி சரக துணைத்தலைவர், சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகள் துறை அவர்களால் இத்திட்டம் மகளிர் தனிச்சிறை கண்காணிப்பாளர் வி.ருக்மணி ப்ரியதர்ஷினி இணைந்து இத்திட்டம் துவக்கி செயல்படுத்தப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments