Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்- உணர்ச்சி பொங்கிய பார்வையாளர்கள்

தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை, கலை பண்பாட்டு துறை, இயல், இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து நடத்திய ஓ.வி.எம் மியூசிக்கல் தியேட்டர் சார்பில் ஸ்ரீராம் சர்மாவின் வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சி கலை காவேரி நுண்கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு நாடகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

60 கலைஞர்கள் தோன்ற, 18 ஆம் நூற்றாண்டை கண்முன்னே கொண்டு வரும் வகையில் வேலு நாச்சியார்,  மருது சகோதரர்கள், குயிலி நாச்சியார் என பொற்கால தோற்றத்துடன், தமிழ் மண்ணின் வீர சரித்திரம் அந்நியர்களால் மறைக்கப்பட்டு, பல்லாண்டு கால உழைப்பின் பயனாக மீண்டும் எழுந்திருக்கும் தாய்த் தமிழ் மண்ணின் வெற்றி சரித்திரமாக வேலு நாச்சியார் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

நாடகத்தை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ன, கல்லூரி மாணவர்கள் கண்டு களித்தனர். இந்த நாடகத்தைப் பார்த்த மக்கள் உணர்ச்சி பொங்க ஆரவாரத்துடன் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *