Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை போராட்டம்

திருச்சி மன்னார்புரத்தில் எல்ஃபின் நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு பன்மடங்கு திருப்பி தரப்படும் என்று கூறப்பட்டதால் பலர் அந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களாக முதலீடு செய்தவர்களின் முதிர்வு காலம் அடைந்த நிலையிலும், பலருக்கு பணம் திரும்பி தரப்படாமல் இருந்து வந்துள்ளது.

இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்ந்து வருகின்றன. வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் பணம் திருப்பி கிடைக்காத ஆத்திரத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் 

இன்று திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே திரண்ட 150க்கும் அதிகமானவர்கள் தங்களின் பணத்தை திருப்பி தர கோரி எல்பீன் நிறுவனம் வழங்கிய கசோலைகளை சாலையில் பரப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய வகையில் புகார் அளித்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து துணை கமிஷனர் முத்தரசுவிடம் புகார் மனு அளித்தபின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *