திருச்சி மாவட்டத்தில் கோவிட் தோற்று அதிகம் பாதிப்பு இல்லாதவர்கள் சேதுராப்பட்டி உள்ள அரசு பொறியியல் கல்லூரி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் கோவிட் மையங்களாக செயல்பட்டு வருகிறது. திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 400க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு சரிவர வழங்கவில்லை எனக் கூறியும் சிலருக்கு உணவு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து தற்போது வளாகத்தின் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியின் புறநகர் பகுதிகளில் கோவிட் தொற்று அதிகம் பாதிக்கப்படாதவர்கள் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி கோவிட் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உணவில் புழு உள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிகிச்சை பெற்று வருபவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments