திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா வளைவு பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் இன்று (22.10.2024) காலை 08:30 மணியளவில் மூன்று நபர்கள் கல்லூரியின் உள்ளே உள்ள கேண்டீன் பின்புறம் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதனை கல்லூரி மாணவ மாணவிகள் நீங்கள் யார். ஏன் இங்கு அமர்ந்து கொண்டு மது அருந்துகிரீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு மேற்படி மூன்று நபர்களும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்மந்தமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அவசர உதவி எண் 9487464651 (Helpline) க்கு வந்த தகவல் கிடைக்கப்பெற்றது.
உடனடியாக துவாக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த 1) ரஞ்சித் கோவிந்தராஜ் (30). த.பெ. ராஜகோபால், செடிமலை முருகன்கோவில் தெரு, தெற்கு மலை, துவாக்குடி. 2) ராஜேந்திரன் (33). த.பெ. சிதம்பரம், செடிமலை முருகன்கோவில் தெரு. தெற்கு மலை, துவாக்குடி ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்ததில். தங்களுடன் இருந்த கார்த்திக் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும். தாங்கள் மூவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு மாணவ, மாணவிகளை தகாத வார்த்தையால் திட்டியதை ஒப்புக்கொண்டனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக துவாக்குடி அரசு கலை கல்லூரியில் பயிலும் மாணவர் வைரவளவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் துவாக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments