Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜயின் லட்சியம்-காங்கிரஸ் கட்சி மூத்ததலைவர் திருநாவுக்கரசு பேட்டி

No image available

திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜயின் லட்சியம், ஆசை – திருச்சியில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டிதிருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்பார ராஜீவ் காந்தி சிலை அருகில் வெயிலின் தாக்கத்தை தணிக்க திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிடடியின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. 

இதனை திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருநாவுக்கரசு திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலையில் சட்டம் ஒழுங்கு உள்ளது என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு…தமிழக அரசு கடும் சட்டங்களை இயற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையினரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர் .

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறுவதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுவது அரசியல் நடத்துவது எதிர்க்கட்சியின் வேலை!பாஜக ஆட்சியில் உள்ள மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லையாபாஜக ஆட்சிக்கு வந்தால் இதை தடுப்போம் என கூறுவது சரியான வாதம் அல்ல. அவர்களாலும் மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக பாஜகவிற்கு செயல்படுகிறார்கள் என்ற ராகுல் காந்தியின் கருத்து குறித்த கேள்விக்கு…

சில இடங்களில் சிலர் ஒரு சிலரோடு இணக்கமாக இருந்து கொண்டு, யார் வேண்டுமானாலும் யார் கூடவும் பேசலாம், பழகலாம் அது வேற விஷயம்.ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் விதத்தில், கட்சியை காட்டிக் கொடுக்கும் விதத்தில், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கட்சியுடனும் சேர்ந்து செயல்படக் கூடாது.அதைத்தான் ராகுல் காந்தி சொல்லி உள்ளார்.

நேற்று கூட எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் ஒரு 5,6 மாவட்டங்களை சுட்டிக்காட்டி கட்சிக்கு எதிராக சிலர் செயல்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.ஆக எல்லா கட்சியிலும் இதுபோன்று நடைபெறுகிறது. கட்சி தலைவர்கள் கண்டிக்க கூடியது வழக்கமான விஷயம் தான்.இதில் அதிர்ச்சி ஒன்றும் கிடையாது. அது போல் இருந்தால் நடவடிக்கை எடுப்பது வாடிக்கையான, சகஜமாக, நிகழக்கூடிய விஷயம் தான்.திமுகவை நேரடியாக விஜய் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு…கட்சி ஆரம்பித்த காலம் முதலிலேயே திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதை மையமாக வைத்தே விஜய் விமர்சித்து வருகிறார்.

மற்ற கட்சிகளை அவர் அதிகமாக விமர்சனம்செய்வதில்லை. பாஜக,அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அவர் விமர்சனம் செய்வதில்லை.காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சனம் செய்வதில்லை, அதனால் பிரச்சனை இல்லை, நல்லது தான்!பல கட்சிகளை அவர் விமர்சனம் செய்வதில்லை,அவர் தாக்குதல் பெரும்பாலும் திமுக மீதுதான் உள்ளது. திமுக ஆட்சியில் இருப்பதால் அதை மாற்ற வேண்டும் என்கிறார். அது அவருடைய ஆசை, லட்சியம், கனவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. அதனால் யாராலும் ஆட்சியை வீழ்த்த முடியாது.காங்கிரஸ் கூட்டணியில் வலுவாக இருக்கிறது.தமிழகத்தில் உள்ள பெரிய கட்சியில் மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *