Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் கிராமியம் போற்று நிகழ்ச்சி – பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திறமைத்திருவிழா!

 கிராமியம் போற்று (தமிழர் கலைகளின் சங்கமம் )
டி.ஆர்.ஒய் பவுண்டேஷன் மற்றும் சிவசக்தி அகாடமி இணைந்து நடத்தும் கிராமியம் போற்று எனும் நிகழ்ச்சி திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் நாளை 04-02-2023 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழர்களின் கிராமியக்கலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி அமையவுள்ளது. முதலாவதாக காலை 8 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் பிரிவுகளில் போட்டியிடப்போகும் நாட்டுப்புற நடனப்போட்டிகள் நடக்கவுள்ளன.

நம் நாட்டுப்புற இசையோடு ஒலிக்கும் பாடல்களுக்கு ஏற்றாற்போல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் குழு நடனப்போட்டி இடம்பெறவுள்ளது. கிராமியக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் போட்டியின் நடுவர்களாக செயல்படவுள்ளனர். கிராமிய நடனப்போட்டியில் வெற்றி பெரும் முதல் மூன்று அணிகளுக்கு சுழற்கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் கிராமியக்கலை அணிவகுப்பு நிகழ்ச்சயில் பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெறும் ஒயிலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் என்று நம் பாரம்பரிய கலைகளை போற்றும் விதமாக பல்வேறு கலைகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

நம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமான வாசகங்களும், இயற்கையின் முக்கியத்துவத்தை கலைகளின் வழியே உணர்த்தும் பிரம்மாண்ட நிகழ்வாக இந்த அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் சுமார் 30 லட்சம் மரங்கள் வளர்க்க காரணமாக இருந்த லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன் அவர்களுக்கு “ட்ரீ மேன் ஆப் திருச்சி” எனும் விருது வழங்கப்படவுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கவுள்ளார். 
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன்,  திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன்,  தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சை மண்டல பேராயர் பேரருட்திரு முனைவர் த.சந்திரசேகரன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டாக்டர்.டி.பால் தயாபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆயிரகணக்கான பள்ளி மாணவ மாணவிகளின் நடனத்திறமை மற்றும் பிரம்மாண்டமான கிராமியக்கலை அணிவகுப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்கள் கட்டணம் ஏதுமின்றி தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து இந்நிகழ்வை நேரில் கண்டுகளிக்கலாம். இந்நிகழ்ச்சியை வழங்குவோர் திருச்சி சாரதாஸ், இணைந்து வழங்குவோர் அம்மன் டி.அர.ஒய்., இந்திரா கணேசன் கல்விக்குழுமம், விக்னேஷ் குரூப்ஸ், வைட் & பிளாக், மற்றும் வெட் ஆர்ட் போடோஸ்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *