திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அடுத்த அசூர் கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் இமானுவேல் (52). இவருக்கு மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு வாகனம் மோதி இமானுவேல் விபத்தில் சிக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க கூறி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவருடைய மறைவிற்கு மாவட்ட நிர்வாக அரசு அலுவலர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்துமைக்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இமானுவேல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments