வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு புது தொழில் நுட்பங்களையும் ஒவ்வொரு துறையிலும் ஏற்பது போல் தற்போது கல்வித்துறையிலும் மெய்நிகர் வகுப்பறைகள் அதிகமாய் பயன்படுத்த தொடங்கியுள்ளது ஆரோக்கியமான வளர்ச்சியே.
ஸ்மார்ட் வகுப்பறை வகுப்புகள் மூலம் கல்வி பயிற்றுவித்தல் என்பது அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளோடு ஒப்பிடும்போது தொழில்நுட்பத்தின் பயன்பாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் குறைவாக இருக்கின்றது.
அதனை அதிகரித்து வரும் முயற்சியில் பள்ளி கல்வித் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு பள்ளிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதற்காக திருச்சி ரோட்டரி கிளப் சார்பாக மெய்நிகர் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள் உபகரணங்களை அளித்து உதவியுள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கூறுகையில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 73 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறை உள்ளது. இதுவரை மெய்நிகர் வகுப்பறை உள்ள பள்ளிகள் சோமரசம்பேட்டை, கள்ளிக்குடி, இ.புதூர், பிராட்டியூர், திருமலை சமுத்திரம், முடி கண்டம், உய்யக்கொண்டான் திருமலை
இன்று திருச்சி மலைக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் உதவியால் பள்ளக்காடு மான்ய நடுநிலைப் பள்ளி மெய்நிகர் வகுப்பறை பெற உள்ளது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் அரசும் இதுபோன்ற அமைப்புகளும் இணைந்து செயல்படுவது ஒரு ஆக்கபூர்வமான செயலாக இருக்கின்றது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments