ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான நாள் கொண்டாடப்படுகிறது. அதன் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி அரசு மருத்துவமனையின் முதல்வர் தலைமையில் கடந்த வருடத்தில் (2022) இம்மருத்துவமனைக்கு இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து கொடுத்த முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளர், இருக்கை மருத்துவ அலுவலர் மற்றும் நோய்குறியியல் துறைத் தலைவர், மாவட்ட திட்ட மேலாளர் (DAPLU) இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மற்றும் அனைத்து இரத்த வங்கி ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments