ஓய்வு பெற்ற காவலர் குருசாமி என்பவரது மகன் குருமூர்த்தி (64). இவர் மாநகர பகுதிகளில் யாசகம் பெற்று ஜீவனம் செய்து வருகிறார். 45 ஆண்டுகால திமுக உறுப்பினரான இவரிடம் மாநகராட்சி ஊழியர்கள் யாசகம் பெரும் தொகையினை பறிப்பதுடன் கேலியாக பேசி இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும்,
இதனால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான மூர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அங்குள்ள காவலர்கள் தன்னை மிரட்டுவதாகவும், தொடர்ந்து திமுக தொண்டனாகிய மூர்த்தி திமுக ஆட்சியிலேயே பணம் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் அச்சுறுத்தல் மற்றும்
பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அவரை உடனடியாக தடுத்து நிறுத்திய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மூர்த்தியை பத்திரமாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments