கொரோனா காலக்கட்டத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் நாடக கலைஞர்களுக்கு, சூர்யா நினைவு அறக்கட்டளை, யோசி மனித வள பயிற்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிட் ஆகியோர் சார்பில் ரூபாய் 80 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்புகள் வழங்கப்பட்டது.
அதன் முதற்கட்டமாக சூர்யா நினைவு அறக்கட்டளை நிறுவனர் சூர்யா சுப்பிரமணியம், யோசி மனித வள பயிற்சி நிறுவனம் நிர்வாக இயக்குனர் ஆதிகிருஷ்ணன், ஸ்ரீ அமுராதி சிட்ஸ் நிர்வாகிகள் வண்டிப்பேட்டை தெருவில் உள்ள நாடக கலைஞர்கள் 50 பேருக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments