Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கையுறை வழங்கப்பட்டு பின்னர் வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழக சட்டமன்ற  தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை, ஸ்ரீரங்கம்,
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரம்பூர்,
லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி ,துறையூர் (தனி)  உள்ளிட்ட 9 தொகுதிகளில்
11 33,020 ஆண் வாக்காளர்களும் 11,99,635 பெண் வாக்காளர்களும் 231 மூன்றாம் பாலினத்தவரின் 23 லட்சத்து 32 ஆயிரத்து 886 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 3, 292 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் படுகிறது.  இதில் 96 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்ட
றியப்பட்டுள்ளது.
எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட ஏற்படாத வகையில் 81 பறக்கும் படை,81 நி

லையான கண்காணிப்பு குழு,
 9 வீடியோ கண்காணிப்புக்குழு,
 9 வீடியோ தணிக்கைக்குழு,
 9 கணக்கு குழு 9 உதவி கணக்கு பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு
 திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 வயதிற்கு மேற்பட்ட மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 44.
போஸ்டர்,
 கட் அவுட் பேனர், உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
திருச்சி சிறுகனூரில்  நடைபெறுவதாக இருந்த  திமுக மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் அனுமதி கேட்கவில்லை.  அங்கு வைக்கப்பட்டுள்ள கொடி, கட்அவுட் ஆகியவற்றை இரண்டு தினங்களில் அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றப்படவில்லை என்றால் அந்த செலவினம் அனைத்தும் அந்த தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

ஐந்து நபர்களுக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.
 கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பதியப்பட்ட வழக்குகளில் 65 சதவீத வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 வாக்காளர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். கையுறைகள்  தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்படும் அதன் பின்னர் வாக்களிக்க முடியும் என்றார். இதற்கென கூடுதலாக இரண்டு சுகாதாரத் துறை பணியாளர்கள் வாக்குச்சாவடி மையத்தில் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டார். உடல் வெப்பநிலையில் மாறுபாடு ஏற்பட்டு அதிகமாக இருந்தால் மாலை 5 மணிக்கு மேல் அந்த வாக்காளர் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *