Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மகாராஷ்டிராவில் இருந்து திருச்சி வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் – ஆட்சியர் பேட்டி!!

திருச்சி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

Advertisement

மகாராஷ்டிராவில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மொத்தம் 4560 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1220 வாக்குப்பதிவு எந்திரங்களும் 3490 கண்ட்ரோல் யூனிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் தற்போது மகாராஷ்டிராவில் இருந்து 570 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 230 கண்ட்ரோல் யூனிட்டுகளும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டது. 

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த வாகன கதவை அனைவருக்கும் முன்பாக திறந்து இறக்கி வைக்கப்பட்டது. மீதமுள்ள 4330இயந்திரங்கள் வருகின்ற 25 ஆம் தேதி கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டியளித்த போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் 5686 வாக்கு பதிவு இயந்திரங்களும், 4341 கட்டுப்பாட்டு கருவிகளும், 4686 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன.

Advertisement

மேலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து வந்து சேரும். இயந்திரங்கள் வந்து சேர்ந்த பின்னர் பிஎச்ஈஎல் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு பதிவான வாக்குகள் 0 நிலைக்கு கொண்டு வரப்படும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 2531 என்ற எண்ணிக்கையில் உள்ள வாக்குசாடிகள் உள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேல் வாக்காளர்கள் கொண்ட வாக்கு சாவடிகளில் பிரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக  இந்த தேர்தலில் கூடுதலாக 810 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *