Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் திருச்சி தேசிய கல்லூரி மாணவனுக்கு ஊக்கத்தொகை வழங்கிய VSP குழுமம்

பூடான் நாட்டில் அடுத்த மாதம் 6.08.2021 & 09.08.2021 தேதிகளில் தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கு பெற பேட்மிட்டன் பிரிவில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் தேர்வாகியுள்ளார். திருச்சி தேசியக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை  உடற்கல்வி பிரிவில் பயின்று வருகிறார்.

இந்நிலையில் பூடான் நாட்டில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்குபெற இருக்கும் சந்தோஷை  திருச்சி VSP குழும தலைவர் அசோக்ராஜா நேரில் வரவழைத்து Pride of Trichy என்ற பட்டத்தையும், ரூபாய் 25 ஆயிரம் காசோலையும் வழங்கி ஊக்குவித்து உள்ளார். இந்த சந்திப்பில் தேசிய கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கலந்து கொண்டார்.

மாணவன் சந்தோஷ் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தேர்வாகியுள்ளது, குறித்து கல்லூரியின் துணை முதல்வர் பசங்க பாலாஜி கூறுகையில்… ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியிலிருந்து பல மாணவர்கள் விளையாட்டு துறையில் பல சாதனைகளை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பூட்டானில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப்  போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் என் கல்லூரி மாணவர் கலந்துக்கொள்ளவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதுமட்டுமின்றி மாணவனை ஊக்குவிக்கும் விதத்தில் VSP  குழுமம் வழங்கிய Pride Of Trichy என்ற பட்டமும் 25000 காசோலையும், ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைந்தது. சர்வதேச அரங்கில் வெற்றியை பதிவு செய்வது என்பது சாதாரண செயல் அல்ல, சந்தோஷின் வெற்றியானது. இந்தியாவிற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மேலும் இது குறித்த போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர் சந்தோஷ் கூறுகையில், சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதே என்னுடைய லட்சியம். பட்டமும் ஊக்கத்தொகையும் என்னை மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது. போட்டியில் வெற்றி பெற்று நாட்டிற்கும்  கல்லூரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் அதற்காக முழு முயற்சியோடு விளையாடுவேன் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *