Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அரசு பணத்தை ஆட்டையைப் போட்ட ஊராட்சி மன்ற தலைவர் – வார்டு உறுப்பினர் குற்றச்சாட்டு – ஆடியோ வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதால் பரபரப்பு!!

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கிருத்திகா அருண்குமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விளையாட்டுத் திடல் சரி செய்யாமல் ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்துள்ளதாகவும், அதுமட்டுமன்றி 8வது வார்டில் சிமெண்ட் சாலை, வடிகால் முழுமையாக தூர் வாராமல் பணம் எடுப்பதற்கு மட்டும் ஆதாரம் வழங்கியும், பணத்தை கொடுப்பது தொடர்பான வீடியோ ஆடியோ ஆதாரங்களை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்குமாறு எட்டாவது வார்டு உறுப்பினர் செந்தில் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Advertisement

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் 8வது வார்டில் பேனல் போர்டு இல்லாததாக சாக்கடை தூர்வாரிய ரஞ்சித் குமார் என்பவர் பெயரில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெருவிளக்கு பராமரிப்பு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் தண்டபாணி என்ற பெயரிலும் ஆதித்யன் என்பவர் பெயரிலும் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தண்டபாணியிடம் கேட்டபொழுது “வேலை எதுவும் செய்யப்படவில்லை, எனது பெயரில் பணம் வந்தது அதை எடுத்து நான் தலைவரிடம் கொடுத்துவிட்டேன்” என்று தெரிவித்ததாகவும்,

மே 16 ஆம் தேதி துணைத்தலைவர் மகேஷ் குமார் ஊராட்சி செயலர் ஆகியோர் முன்னிலையில் ஆற்றில் உள்ள மோட்டார் சரி செய்து தண்ணீர் வந்த வீடியோ, போட்டோ வந்த நிலையில் புது மோட்டார் மாற்றியதாக கணக்கு எழுதி நிர்வாக செலவு என்ற பெயரில்19000 மற்றும் 19800 பணம் எடுக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாகவும், ஊராட்சி செயலாளர் மூலமாகவும், எட்டாவது வார்டு உறுப்பினர் செந்தில் குமார் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பணத்தைப் பிரித்துக் கொள்வது குறித்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சுமார் 2 லட்சத்து 14 ஆயிரம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும், கையாடல் செய்த பணத்தை மீட்டு பகுதி மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார் அப்பகுதியின் எட்டாவது வார்டு உறுப்பினர் செந்தில் குமார்.

இதுகுறித்து பெருகமணி ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமேகலையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா துணைத் தலைவருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்பதால் தான் சொல்லும் இடத்தில் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்தி தனக்கு பணம் கொடுத்து அதைப் பெற சொல்லி மிரட்டுவதாகவும், பகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய நிதியை கையாடல் செய்து கொள்வதாகவும், இதனால் தங்களுடைய பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தங்கள் சிரமப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிதியை தவறாக கையாடல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *