திருச்சி மாவட்டம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மைதானத்தின் அருகில் கழிவுநீர் கால்வாய் ஒன்று செல்கிறது. இந்த கழிவு நீர் கால்வாயில் இருந்து நீர் வழிந்து அரசு பள்ளி மைதானத்திற்குள் புகுந்து முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
இதனால் அரசு பள்ளியைச் சுற்றி இருக்கும் பாரதி நகர், ஜே.ஜே.நகர், கணபதி நகர், சக்தி நகர் ஆகிய குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி மற்றும் பாம்பு போன்ற விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த அரசு பள்ளி அருகிலேயே காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம் உள்ளது. இந்நிலையில் இங்கு தேங்கி இருக்கும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம், முதல்வர் தனிப்பிரிவு என அனைவரிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments