தமிழக தண்ணீர் கூட்டமைப்பான தண்ணீர் தேசத்தின் தொடக்கவிழா திருச்சியை அடுத்த புலிவலத்தில் நடைபெற்றது.
ஓயாசிஸ் கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்ற இத்தொடக்க விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் களப்பணாற்றி வரும் தண்ணீர் பாதுகாப்பு இயக்கங்கள் பங்கேற்றன. சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, இத்தகைய கூட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
நீர் மேலாண்மைத் திட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்திவருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நேரு, இக்கூட்டமைப்பின் நோக்கங்கள் நிறைவேற தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும் எனத் தெரிவித்தார்.
RISE அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத்கஸ்பர், எக்ஸ்னோரா தலைவர் செந்தூர் பாரி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று நீர் மேலாண்மைத் திட்டச் செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்பின் அவசியம் குறித்துப் பேசினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments