Advertisement
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் பொன்.முருகேசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்… “அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனி சின்னமான செருப்பு சின்னம் ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
Advertisement
செருப்பு சின்னம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி மதம் பாராமல் பயன்படுத்தப்படும் பொருள் என்பதால் மக்களுக்காக செருப்பாய் உழைப்போம் என்பதை நிலைநாட்டவும், எங்கள் கழகம் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் மக்கள் மத்தியில் சின்னம் எளிதில் மனதில் பதிவு செய்வதற்காகவும், எங்களால் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெறப்பட்ட சின்னம் செருப்பு சின்னமாகும்.
எங்களுடைய கழகம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளது. எங்களது கழகம் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருவதால் துறையூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக கழகத்திற்கு விருப்ப மனு அளித்துள்ளதாகவும், அப்படி அளிக்காத பட்சத்தில் அமமுக உடன் கூட்டணி சேர இருப்பதை பொதுக்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Advertisement
திமுக கூட்டணியில் எங்களுக்கு துறையில் தொகுதி வழங்கப்படும் என நம்புவதாகவும் துறையூர் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்தால் நிச்சயமாக வெற்றிக்கனியை திமுக தலைமையிடம் ஒப்படைப்போம்” எனவும் கூறினார்.
Advertisement
Comments