திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் காமராஜ்நகர் சூரன்சேரி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி ( 50 ) மற்றும் வரகனேரி எடத்தெரு ரோடு பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த வைத்தான் என்கின்ற சுதாகர் ( 41 ) ஆகிய இருவரும் காந்தி மார்க்கெட் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர்.
இவர்கள் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் தொடர்ந்து சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் கஞ்சாவை விற்று வருவதால் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி இவர்கள் இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments