திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பெல் நிறுவன நுழைவுவாயில் முன் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ வெங்கல சிலையை தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்கேடி கார்த்திக், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் எஸ் பி பாண்டியன்,
மாவட்ட நிர்வாகி சுபத்ரா தேவி, அதிமுக நிர்வாகிகள் பாலமூர்த்தி, பொய்கைகுடி முருகா உள்ளிட்ட 8 பேர் அனுமதியின்றி வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைத்ததாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர் இதற்காக திருச்சி புதுக்கோட்டை சாலையில் கட்சி கொடியை நட்டனர் அப்போது அங்கு ரோந்து வாகனத்தில் வந்த விமான நிலைய காவல்துறையினர்
அதிமுகவினரிடம் அங்கு கட்சி கொடிகளை நடக்கூடாது என தெரிவித்தனர். தொடர்பாக அதிமுகவிற்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு நிலவியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
378
07 July, 2023










Comments