Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வளர்ச்சி என்ற பெயரில் தொலைந்து போனவை அபார ஆற்றல் உடையன – உலக வனவிலங்கு தினம்

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ஆம் தேதி உலக வனவிலங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. வனங்களில் உள்ள மிக அழகான பல்வேறு உயிரினங்களை கொண்டாடுவதற்கு இது உகந்த நாளாக இருக்கிறது. வன விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இந்த நாள் மூலமாக ஏற்படுத்தப்படுகிறது. இறைவன் படைப்பில் மிக அழகானதொரு படைப்பு விலங்கினங்கள். வீட்டு விலங்குகள் ஆகட்டும். வன விலங்குகள் ஆகட்டும். ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு அதனதன் படைப்பில் சமீபகாலமாக காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதை கேள்விப்படுகிறோம். அதன் காரணத்தை ஆராய்ந்தால். மரங்கள் வெட்டப்படுவதும். குடியிருப்பு பகுதிகள் வனப்பகுதியில் அதிகரிப்பதும். ஒரு காரணம் அவற்றின் இடத்தை நாம் ஆக்கிரமித்தால். அவற்றின் வாழ்வாதாரத்தை நாம் அழித்தால்.

அவை வேறுவழியின்றி ஊருக்குள் வருவதை நம்மால் தடுக்க முடியாது. 
வனம் பிரத்தியோகமாக வன விலங்குகளுக்காக படைக்கப்பட்டவை என்பதை மனதில் கொண்டு …மரங்களை
வெட்டாது இருப்போம். வனத்தின் வளங்கள் பாதுகாக்கப்பட்டால்  வனவிலங்குகள் ஊருக்குள் வராது. அவற்றின் வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். தமிழக அரசின் வனத்துறை பாதுகாப்பில் வனவிலங்குகள் மிகவும் முக்கியமானது. “வனவிலங்குகள் பலியை தடுக்க புலிகள் சரணாலய சாலையில் 12 மணிநேர போக்குவரத்து தடையை அமல்படுத்த வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு”. காடுகளை வளர்ப்பதின் வாயிலாக வனவிலங்ககளையும், பாதுகாப்பதில் தமிழக வனத்துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். வனவிலங்குகள் நேரிடையாக மறைமுகமாவும் பல பயன்களை தருகின்றன. அத்தகைய உயிரினங்களின் பாதுகாப்பு முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. 

தமிழக அரசின் வனத்துறை பாதுகாப்பில் வனவிலங்குகள் மிகவும் முக்கியமானது. காடுகளை வளர்ப்பதின் வாயிலாக வனவிலங்ககளையும்  பாதுகாப்பதில் தமிழக வனத்துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். வனவிலங்குகள்  நேரிடையாக மறைமுகமாவும் பல பயன்களை தருகின்றன. அத்தகைய உயிரினங்களின் பாதுகாப்பு முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. மனித இனம் பூமியில் நிலைத்து வாழ்வதற்கு மற்ற அனைத்து உயிரினங்களின் பங்கும் மிக முக்கியம் என்ற தெளிவே. நேரிடையாகக் கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய உபபொருட்கள் என வன உயிரினங்களிலிருந்து பெறப்படும் பயன்கள் பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினர் காடுகள் சதுப்பு நிலம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வாழ்வியல் ஆதாரங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் இடையிடையேயான இணைப்பில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி மனிதன் மற்றும் விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு 8000-க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கின வகைகள் உதவுகின்றன. மனிதனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை
வன உயிரினங்களை சார்ந்தே அமைந்துளளன. தாவர மற்றம் விலங்கினங்களின் பல்வேறு பயன்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் உயிர் தொழில் நுட்பத்துறை மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. வனஉயிரினங்களை பாதுகாப்போம்.
நாட்டின் வளங்களில் அவற்றின் பங்கு இன்றியமையாதது.

வனவிலங்கு பாதுகாப்பு குறித்து புகைப்பட கலைஞர் சகாயராஜ் பகிர்ந்துக் கொள்கையில்,… ஒரு கோயிலோ, சர்ச்சோ, மசூதியோ சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பதை விட காடு நிறைய கற்றுக்கொடுக்கும் – ஓஷோ நாம் ஏன் வனவிலங்குகளைப் பற்றி கவலைப்பட வேண்டும்? இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்கவும் மனிதகுலம் உணவு மற்றும் நன்னீர் முதல் மாசு கட்டுப்பாடு மற்றும் கார்பன் சேமிப்பு வரை இயற்கை வழங்கும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை சார்ந்துள்ளது. இன்று, உலகம் முழுவதும், வனவிலங்குகள் ஆபத்தில் உள்ளன. நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன, ஏனெனில் அவை வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் கிட்டத்தட்ட பாதியை நாம் அழித்துவிட்டோம். இந்தப் போக்கை மாற்றியமைக்க நாம் முயல வேண்டும் 

இந்த பூமியில் எல்லையற்று இருந்த காடு என்ற ஒன்றை மனிதர்களின் பேராசையால் மிக மிக சுருக்கி, சுருக்கி இன்றைக்கு ஒரு சிறிய எல்லைக்குள் “காட்டை” அடக்கி விட்டோம். இருக்கும் மிச்ச மீதி காடுகளில் வாழும் வன உயிர்கள் சுதந்திரமாக வாழ மனித இனம் முயல வேண்டும். காட்டுயிர்கள் மூலம், காடு பரவும், காடு பெருகி மழையும் பெய்யும், ஆறுகளும் ஓடும், புவியும் குளிரும், மனிதர்களும் வாழலாம். மனிதனுக்கு, தான்தான் உலகையே காத்துக் கொண்டிருக்கிறேன் என்குற அகங்காரம் அழிய வேண்டும் . “கம்மங்கரை காணி எல்லாம், பாடித் திரிஞ்சானே ஆதிகுடி. நாயி நரி பூனைக்கும் தான், இந்த ஏரி குளம் கூட சொந்தமடி. என்ஜாயி என்ஜாமி, வாங்கோ வாங்கோ ஒன்னாகி, அம்மாயி அம்பாரி,
இந்த இந்த மும்மாரி.”என்ற பாடல் வரியே பூமி மனிதர்களுக்காக மட்டுமானதல்ல என்பதை உணர்த்தும் என்கிறார்.

வன விலங்குகள் மற்றும் தாவரங்களில் ஏறத்தாழ 8,000 வகைகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து கொண்டு வருகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் உயிரினங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. ஐ.நா. அமைப்பு கடைப்பிடிக்கும் வறுமை ஒழிப்பு, நில வளங்களை பாதுகாப்பது மற்றும் நீடித்த வகையில் பயன்படுத்திக் கொள்வது போன்ற முயற்சிகளைப் போலவே, அழ்வின் விழிம்பில் உள்ள உயிரினங்களை காப்பதற்கும் ஐ.நா. அமைப்பு உறுதி பூண்டுள்ளது. உயிர் சூழலியலுக்கு மிகவும் இன்றியமையாத உயிரினங்களாக இருப்பவற்றை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்பதே உலக வனவிலங்கு தினத்தின் பிரதான நோக்கம் ஆகும். அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பதற்கான செயல்திட்டம் உருவாக்குவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *